தேனா வங்கி 20 விழுக்காடு பங்கு ஈவு

புதன், 28 ஏப்ரல் 2010 (12:10 IST)
தேனா வங்கி: பொதுத்துறை வங்கியான தேனா வங்கியின் லாபம் 23 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த வங்கி சென்ற நிதி ஆண்டிற்கு 20 விழுக்காடு பங்கு ஈவு அறிவித்துள்ளது.

2009-10 நிதி ஆண்டில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் லாபம் 23 விழுக்காடு அதிகரித்து ரூ. 137.07 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய நிதி ஆண்டு, இதேகாலத்திலவங்கி ஈட்டிய லாபம் ரூ. 111.17 கோடி.)

வங்கியின் வருமானம் ரூ. 1,238.10 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய நிதி ஆண்டு இதேகாலத்தில் வங்கி வருமானம் ரூ. 1,035.83 கோடி)

வங்கியின் வட்டி வருமானம் ரூ. 1,063.24 கோடி உயர்ந்துள்ளது. (முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ. 895.79 கோடி)

2009-10 நிதி ஆண்டில் தேனா வங்கியின் ஒட்டுமொத்த லாபம் ரூ. 511.25 கோடி. (முந்தைய நிதி ஆண்டில் வங்கியின் லாபம் ரூ. 422.66 கோடி).

வெப்துனியாவைப் படிக்கவும்