எஸ்பிஐ லைஃப் இலாபம் ரூ.276 கோடி

புதன், 28 ஏப்ரல் 2010 (11:35 IST)
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) துணை நிறுவனமான எஸ்பிஐ லைஃப் 2009-10 நிதி ஆண்டில் ரூ. 276 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

இதன் ஒட்டுமொத்த பிரீமியம் வருவாய் ரூ. 10 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. நிறுவனத்தின் மேலாண்மையில் உள்ள சொத்து மதிப்பு 96 விழுக்காடு அதிகரித்து ரூ. 28,551 கோடியாக உயர்ந்துள்ளது.
எஸ்பிஐ லைஃப் ஆண்டபிரீமிய வருவாயும் 37 விழுக்காடு அதிகரித்து ரூ. 6,358 கோடியாக உயர்ந்துள்ளது இதன் பங்கு மூலதனம் ரூ. 1,000 கோடி.

வெப்துனியாவைப் படிக்கவும்