காலிபிளவர் விலை வீழ்ச்சி

திங்கள், 9 பிப்ரவரி 2009 (13:28 IST)
தேனி மாவட்டம் போடி பகுதியில் காலிபிளவர் அதிகளவு விளைந்துள்ளது. இதனால் இதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போடி வட்டத்தில் ராசிங்காபுரம், கோம்பை, உப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவு காலிபிளவர் பயிரிட்டுள்ளனர்.

சென்ற மாதங்களில் இங்கு 25 காலிபிளவரகொண்ட கூடையின் விலை ரூ.200 முதல் ரூ.300 வரை இருந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்து, அறுவடையும் தொடங்கி உள்ளது. இந் நிலையில் காலிபிளவர் விலை குறையத் தொடங்கி உள்ளது.

தற்போது 25 காலிபிளவரகொண்ட கூடை விலை ரூ.100 என்ற அளவில் குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்