பஜாஜ் பல்சர் ஜூனியர் அறிமுகம்

திங்கள், 9 பிப்ரவரி 2009 (14:56 IST)
இந்தியாவில் இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 135 சி.சி திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

webdunia photoFILE
இது இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி, இளைஞர்களை கவர்ந்த பல்சர் போன்ற தோற்றத்துடன் உள்ளது. இதனால் இதை “பல்சர் ஜூனியர்” என்றும் அழைக்கலாம்.

இளைஞர்கள் மட்டுமின்றி, நடுத்தர வயதுப் பிரிவினரும் பயன்படுத்தும் வகையில் பல்சர் ஜூனியர் உள்ளது. இதிலும் டிஜிட்டல் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களாக ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கே உரித்தான டிஜிட்டல் கன்சோல், டிஸ்க் பிரேக், 5 ஸ்பீட் கியர் பாக்ஸ், ஆட்டோ சோக், வாயு நிரப்பப்பட்ட அப்சார்பர்கள், டுவின் பைலட் லாம்ப்ஸ் போன்றவைகளை கூறலாம். 10.5 பி.எச்.பி என்ஜின், ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பு உள்ளிட்ட இந்த பைக்கின் விலை ரூ. 45 ஆயிரம்.