ஹெச்.டி.எப் சி வங்கி மாணவர்களுக்கு உதவி

சனி, 7 பிப்ரவரி 2009 (17:03 IST)
ஹெச்.டி.எப்.சி வங்கி நான்காவது முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை (scholarship) வழங்குகின்றது.


இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எப்.சி வங்கி, ஊட்டச் சத்து நிறுவனமான ஹார்லிக்ஸ் உடன் இணைந்து, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு “ஹெச்.டி.எப்.சி பாங்க் மெரிட் ஸ்காலர்சிப்” என்ற பெயரில் (HDFC Bank Meritus scholarship) படிப்பு செலவிற்கு உதவித் தொகையை வழங்குகின்றது. இது படிப்பு செலவிற்கான உதவி செய்ய 5 ஆயிரம் மாணவர்களை தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வழங்கப்படும். இந்த மாணவர்களுக்கு ரூ.2,500 முதல் ரூ.10 வரை வழங்கப்படும்.

இந்தியாவிலேயே முன்மாதிரியான கல்வி உதவி தொகை திட்டத்தை பற்றி வங்கியின் தலைவர் ராகுல் பகத் கூறுகையில், எங்கள் வங்கியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகவும், இந்திய இளைஞர்கள் திறமையுள்ளவர்களாக உருவாகவும் எடுத்துள்ள சிறு பங்களிப்பே.

இந்த மாணவர்கள் வளர்ந்து, மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்குவதற்கு, நாங்கள் வழிகாட்டியாக இருப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மாணவர்களுக்கு இந்தியா படித்தவர்கள் அதிகம் உள்ள நாடு, சிறப்பான எதிர்காலம் உடைய நாடாக வளர்வதற்கு உதவி செய்கின்றோம் என்று தெரிவித்தார்.

இந்த கல்வி உதவி தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், இரண்டு முறை எழுத்துத் தேர்வு, இரண்டு முறை தொலைபேசியில் நேர்காணல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் அவர்களின் தேர்வுக்கும் தாயராவதற்கு உதவி செய்யும் வகையில் கேள்விகள், இந்த மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டன.

இத்துடன் படிப்பு மட்டுமல்லாது விளையாட்டு, நடனம் போன்ற மற்ற அம்சங்களின் திறமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சுயேச்சையான நிபுணர்கள் குழு, கல்வி உதவி தொகை பெறும் மாணவர்களை தேர்ந்தெடுத்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்