பொறியியல் கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனமான லார்சன் அன்ட் டியூப்ரோ (எல்& டி) நிறுவனம், சென்னை அருகே ஒருங்கிணைந்த கப்பல் கட்டும் தளத்தை அமைக்க உள்ளது.
இந்த கப்பல் கட்டும் தளம் எண்ணூர் அருகே அமையும். இதன் திட்ட பணி 18 மாதங்களில் நிறைவடையும் என்று எல் அனட் டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் கட்டும் தளத்தை பற்றி நிறுவனத்தின் தலைவர் கே.வெங்கட்ராமன் கூறுகையில், இதற்கான மொத்த முதலீடு ரூ. 2 ஆயிரம் கோடி. இந்த கப்பல் கட்டும் தளத்தில் பெரிய கப்பல்களைக் கட்டவும் திட்டமிட்டுள்ளது.
அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். தென்னிந்தியாவில் பல திட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தார்.