இந்த நிதி ஆண்டில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.263.26 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதன் வருமானம் ரூ.4,758.62 கோடி. இது சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 34 விழுக்காடு குறைவு.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 7,251.83 கோடியாக இருந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததால் நிறுவனம் ரூ.226.52 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.