தேவன் ஹவுசிங் இலாபம்

வியாழன், 5 பிப்ரவரி 2009 (18:12 IST)
தேவன் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ. 23.22 கோடி லாபமாக ஈட்டியுள்ளது. இதன் வருவாய் 29 விழுக்காடு அதிகரித்து, ரூ. 183.17 கோடியாக அதிகரித்தது. இந்த காலாண்டில் ரூ. 554.81 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டு நிதி ஆண்டில், இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் வழங்கிய கடன் ரூ. 516.17 கோடி. இது ஒட்டுமொத்தமாக ரூ.5,127.77 கோடி கடன் வழங்கியுள்ளது. இதன் மொத்த சொத்து மதிப்பு ரூ. 5,758.82 கோடியாக உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்