இந்தியா சிமென்ட்- ஊழியர்களுக்கு பங்கு ஒதுக்கீடு

புதன், 4 பிப்ரவரி 2009 (15:39 IST)
இந்தியா சிமென்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, அதன் ஊழியர்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த இயக்குநர்கள் குழு கூட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற்றது. அதில் ஊழியர்களுக்கு 2006 ஆம் ஆண்டின் ஐ.சி.எல்., ஈ.எஸ்.ஒ.எஸ் (ICL ESOS) திட்டத்தின் படி, 63,250 பங்குகள் ஒதுக்கப்படும். பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்குகள், ரூ.40 பிரிமியத்தில் ஒதுக்கப்படும் என்று மும்பை பங்குச் சந்தையிடம் அறிவித்துள்ளது.

இந்த பங்கு ஒதுக்கீட்டினால் இந்தியா சிமென்டின் செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.282.37 கோடியில் இருந்து ரூ.282.43 கோடியாக அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்