புது டெல்லி: உலக அளவில் மின்னணு தொழில்நுட்ப நிறுவனங்களில், குறிப்பிட்ட நிறுவனமான மோசர் பேயர் இந்தியா லிமிடெட் நிறுவனம் மிகவும் மெல்லிய, கண்ணைக் கவரும் எல்.சி.டி, டி.எஃப்.டி மானிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மானிட்டருக்கு குறைந்த அளவு மின்சாரமே தேவை. இதன் எடை 4 கிலோ. இதன் வடிவமைப்பு மற்றும் கவர்ந்திழுக்கும் நிறம், படங்கள் துல்லியமாக தெரிவதுடன், இதனுள்ளே ஸ்பீக்கர்கள் உள்ளன. இதனால் துல்வியமாக ஒலியைக் கேட்கலாம் இதன் விலை ரூ.7 ஆயிரம்.
கணினி விளையாட்டு, மல்டி மீடியா உபயோகிப்பாளருக்கு ஏற்றது. இந்தியா முழுவதும் சலோரா இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் டெக் பசிபிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து முன்னணி விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.