சிமெண்ட் விற்பனை அதிகரிப்பு

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (14:18 IST)
இந்தியாவின் முன்னணி சிமென்ட் நிறுவனங்களின் ஒன்றான ஏ.சி.சி நிறுவனத்தின் சிமென்ட் விற்பனை ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளது.

ஜனவரியில் இதன் சிமென்ட் விற்பனை 1.89 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது சென்ற வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.5 விழுக்காடு உயர்வு. இந்த மாதத்தில் 1.87 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சென்ற வருடம் ஜனவரியில் 1.68 மில்லியன் டன் விற்பனையானது. 1.67 டன் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 46 விழுக்காடு சுவிட்சர்லாந்தை சேர்ந்த சிமென்ட் நிறுவனமான ஹோல்சிம் {Holcim} வசம் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்