மின்விடுமுறை வேண்டாம்

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (12:01 IST)
இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு, வார மின் விடுமுறையை அமல்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து இந்திய தொழில் வர்த்தக சபையின் வர்த்தக சபையின் கோவை பிரிவு தலைவர் மகேந்திர ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில் பேசிய மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு 40 விழுக்காடு மின்வெட்டும், குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கு 20 விழுக்காடு மின்வெட்டும் அமலில் உள்ளது என்றும், இந்த தொழிற்சாலைகள் வார மின்விடுமுறைக்கு சம்மதம் தெரிவித்தால் மின்வெட்டை ஓரிரு நாள்களில் தளர்த்துவதற்கு தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மின்வெட்டை தளர்த்துவது வரவேற்புக்குரியது. இருப்பினும் மின்விடுமுறை அளிப்பது சரியானதாக இருக்காது. கடந்த 3 மாதங்களில் அதிகாரப் பூர்வமான மின்வெட்டு அமலில் இருப்பதால் "கிரிட்'-ன் நிலைத் தன்மை திருப்தியாக உள்ளது. ஆகவே, தற்போது அமலில் உள்ள அதிகாரப்பூர்வ மின்வெட்டைத் திரும்பப் பெறாமலேயே மின்வெட்டை மேலும் குறைக்கும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்