சோழமண்டலம் டிபிஎஸ் பைனான்ஸ் முதலீடு அதிகரிப்பு

சனி, 31 ஜனவரி 2009 (17:45 IST)
சோழமண்டலம் டி.பி.எஸ் பைனான்ஸ் நிறுவனத்தில் புதிதாக முன்னூறு கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ் வங்கியும், இதன் பங்குதாரர் முருகங்கப்பா குழுமமும் இணைந்து சோழமண்டலம் டி.பி.எஸ் பைனான்ஸ் (Chola DBS) என்ற நிறுவனத்தை நடத்துகின்றன.

இதில் டி.பி.எஸ் வங்கியும், முருகப்பா குழுமமும் இணைந்து முன்னூறு கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளன. இந்த நிதி நிறுவனத்தை பலப்படுத்த முதலீடு செய்யப்படுகிறது.

சோழமண்டலம் டி.பி.எஸ் பைனான்ஸ் நிறுவனம், கடன் கொடுத்ததில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி, இதன் முதலீட்டை அதிகரிக்கும் வகையில் ரூ.300 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

இத்துடன் மற்றவர்கள் முதலீடு ரூ.100 கோடி முதலீடு செய்ய உள்ளனர். இந்த புதிய முதலீடு இதன் முதலீடு அளவை பராமரிக்கவும், கடன் வழங்கவும் பயன் படுத்திக் கொள்ளப்படும்.

இந்தியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடியால், கடன் பெறுவது குறைந்தது. இதனால் இந்த நிறுவனம் 75 கிளைகளை மூடியது.

தற்போது செய்யப்படும் ரூ.300 கோடி முதலீட்டில், டி.பி.எஸ் வங்கியும், முருகப்பா குழுமமும் தலா ரூ.150 கோடி முதலீடு செய்ய உள்ளன.

தற்போதைய நிலவரப்படி சோழமண்டலம் டி.பி.எஸ் பைனான்ஸ் நிறுவனத்தில் டி.பி.எஸ் வங்கிக்கு 37.5 விழுக்காடு பங்குகள் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்