வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 பைசா அதிகரித்தது.
இந்திய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்கும். இதனால் டாலரின் வரத்து அதிக அளவு இருக்கும் என்பதால், ஏற்றுமதியாளர்கள், வங்கிகள் டாலரை விற்பனை செய்தன.
இதுவே டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.86 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 39 பைசா குறைவு.
வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.49.25-49.27.
இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.86 முதல் ரூ.48.90 என்ற அளவில் இருந்தது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்: 1 டாலர் மதிப்பு ரூ.48.85 பைசா 1 யூரோ மதிப்பு ரூ.64.51 100 யென் மதிப்பு ரூ.54.60 1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.68.68.