வரலாறு காணாத வகையில் தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரு.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.10,408க்கு விற்பனையானது.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடந்த 2 ஆண்டுகளாகவே அவ்வப்போது தங்கத்தின் விலை அதிகபட்சமாக உயர்வதும், குறைந்த பட்சமாக குறைவதுமாக இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.1251-க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று காலை தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.1301-க்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு சவரன் விலை ரூ.10,408. அதாவது ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்தது. ஆனால் நேற்று மாலையில் மீண்டும் ஒரு கிராம் ரூ.1288-க்கு குறைந்தது.