வைரத் தொழிலாளி மனைவி, குழந்தை தற்கொலை

வியாழன், 22 ஜனவரி 2009 (15:21 IST)
உலகளாவிய அளவில் அழுத்திக்கொண்டிருக்கும் பொருளதார பின்னடைவின் காரணமாக குஜராத்தில் வேலையை இழந்த வைரத் தொழிலாளி ஒருவரின் மனைவியும், குழந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரோடா பகுதியில் வசித்து வருபவர் பஞ்சம் ரத்தோர். மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்து வைரத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். உலகளாவிய அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு காரணமாக வைர ஏற்றுமதி குறைந்ததையடுத்து மூன்று மாதத்திற்கு முன்பு வேலை இழந்தார்.

பஞ்சம் அன்றாட கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ராதா பல வீடுகளில் சென்று வேலை பார்த்து வந்தார். ஆயினும் வாழ்க்கை நடத்தும் அளவிற்கு வருவாய் கிட்டவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை தனது கணவர் வீட்டிலில்லாத போது, தன் மீதும், தனது ஒரு வயது குழந்தை சானியா மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ராதா என்று சம்பவத்தை புலனாய்வு செய்த காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைரத் தொழிலில் ஏற்பட்ட சரிவின் காரணமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் வேலையிழந்த 12க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதுவரை வேலையிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்