ஹெச்.டி.எப்.சி இலாபம் ரூ.546 கோடி

புதன், 21 ஜனவரி 2009 (17:09 IST)
ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிகர இலாபமாக ரூ.546.83 கோடி பெற்றுள்ளது. (சென்ற நிதி ஆண்டில் இதே கால கட்டத்தில் நிகர இலாபம் ரூ. 648.93 கோடி)

இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டின் (அக்டோபர்-டிசம்பர்) இலாப-நஷ்ட கணக்கை ஹெச்.டி.எப்.சி வெளியிட்டது. இதன் மொத்த வருவாய் ரூ.2,917.77 கோடியாக அதிகரித்துள்ளது. (சென்ற நிதி ஆண்டில் இதே கால கட்டத்தில் மொத்த வருவாய் ரூ.2,046.93 கோடி).

இந்த நிதி ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் இதன் மொத்த வருவாய் 7,823.79 கோடியாக உள்ளது. இது சென்ற வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 36.46 விழுக்காடு அதிகம்.

ஆனால் நிகர இலாபம் குறைந்துள்ளது. இதன் நிகர இலாபம் 9 மாதத்தில் ரூ.1,549.17 கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டு 9 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 7.13 விழுக்காடு குறைவு. (சென்ற நிதி ஆண்டில் இதே கால கட்டத்தில் நிகர இலாபம் ரூ. 1,668.13 கோடி)

மும்பை பங்குச் சந்தையில், இதன் பங்கு விலை மதியம் 1,406.90 என்ற அளவில் இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்