தங்கம் இறக்குமதி 47% சரிவு

புதன், 21 ஜனவரி 2009 (17:03 IST)
2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி கிட்டத்தட்ட 47 விழுக்காடு வரை சரிந்துள்ளதாக தேசிய மு‌ன்பேர வர்த்தக பரிமாற்றத்தின் பொருளாதார நிபுணர் மனாசே எஸ். கோகலே தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டில் நிலவிய அதிக விலையே, கிட்டத்தட்ட 402 டன் அளவிற்கு தங்கம் இறக்குமதி சரிவிற்கு காரணம் என்று கூறியுள்ள நிபுணர், கடந்த 2008 டிசம்பர் மாதம் 3 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2007 டிசம்பர் மாதம் 16 டன்னாக இருந்தது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்