எள் மீதான கொள்முதல் வரியை நீக்க வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
செவ்வாய், 20 ஜனவரி 2009 (18:00 IST)
எள் மீதான நான்கு சதவீத கொள்முதல் வரியை நீக்கவேண்டும் என வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த சங்கத்தின் தலைவர் சிவநேசன், பொதுசெயலாளர் ஜெகதீசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்களின் நலன்கருதி எண்ணெய் மீதான மதிப்புகூடுதல் வரியை நீக்கியதற்கு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நல்லெண்ணை தயாரிக்கும் மூலப்பொருளான எள் மீது 4 சதவீதம் கொள்முதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை திரும்ப பெற முடியாத சூழல் ஏற்பட்டால் நல்லெண்ணை மீது விதிக்கப்பட்ட 4 சதவீத கொள்முதல் வரியை நீக்கவேண்டும்.
சிறு, குறு தொழில்பட்டியலில் நல்லெண்ணை உள்ளதால் ஏழைமக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆகவே இதை கருத்தில் கொண்டு வரி சீராய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.