பரமத்தி வேலூர் வெற்றிலை ஏல சந்தையில் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.
பரமத்தி வேலூர் தாலுகாவில் பல ஊர்களில் வெற்றிலை பயிர் செய்யப்படுகிறது. இங்கு விளையும் வெற்றிலைகள் ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும், கோவை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்ப படுகிறது.
பரமத்தி வெற்றிலை ஏல சந்தையில் சென்ற வாரம் வெள்ளைக்கொடி இளங்கால்மார் ரகம் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், முதியம் பயிர் வெற்றிலை ரகம் சுமை ஒன்று ரூ.1,500 க்கும், இளம்பயிர் கற்பூர வெற்றிலை ரகம் சுமை ஒன்று ரூ. ஆயிரத்திற்கும், முதியம் பயிர் வெற்றிலை ரகம் ரூ.600 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி இளங்கால்மார் ரகம் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், முதியம் பயிர் வெற்றிலை ரகம் சுமை ரூ.2 ஆயிரத்திற்கும், கற்பூர வெற்றிலை இளம்பயிர் ரகம் ரூ.1,500, முதியம்பயிர் கற்பூர வெற்றிலை சுமை ரூ. ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெற்றிலை விலை அதிகரித்துள்ளதால், வெற்றிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.