தென்னை நார்த் தொழில் பாதிப்பு

சனி, 17 ஜனவரி 2009 (12:20 IST)
தென்னை நாரில் இருந்து தயாரிக்கப்படும் கயிறு பொருட்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால் தென்னை நார்த் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிகப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொள்ளாச்சி உட்பட பல்வேறு ஊர்களில் தென்னை மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் நார் கேரளா உட்பட பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இதில் இருந்து தயாரிக்கப்படும் மிதியடி, தரை விரிப்பு போன்றவை உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதுடன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கயிறு பொருட்கள் ஏற்றுமதி சுமார் 20 விழுக்காடு குறைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி பகுதியில், உள்ள சுமார் 350
தொழிற்சாலைகளபாதிக்கப்பட்டுள்ளன. இத்துடனமின்வெட்டு, தேங்காயமட்டவிலஉயர்வபோன்றவையுமநிலைமையமேலுமசிக்கலாக்கியுள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்