சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு நிதி உதவி தேவைப்பட்டால், அரசு தேவையான உதவிகளை செய்வது பற்றி பரிசீலிக்கும். இதன் நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசு எல்லா வழிகளையும் ஆராயும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இது உலக அளவில் இந்தியாவின் மரியாதை சம்பந்தப்பட்டது. அத்துடன் அதில் பணிபுரிபவர்களின் வேலைகளை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.