வாகன வாராக் கடன் ரூ. 20 ஆயிரம் கோடி

செவ்வாய், 13 ஜனவரி 2009 (15:18 IST)
மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் வாராக் கடன் ரூ. 20 ஆயிரம் கோடி உள்ளது. இத்துடன் பொதுத்துறை வங்கிகளுக்கு கடந்த ஆண்டு மார்ச் வரையிலான நிலுவைத் தொகை ரூ. 20,487 கோடியாக எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) நிலுவையில் உள்ள வாகன வாராக் கடன் 2.97 விழுக்காடு அதிகரித்து ரூ. 7,149 கோடியாக அதிகரித்துள்ளது.

இதே போலே கனரா வங்கிக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 944 கோடி.

பிற வங்கிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை விபரம் வருமாறு:
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 926 கோடி, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ரூ.921 கோடி, விஜயா வங்கி ரூ. 841 கோடி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ரூ. 805 கோடி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ரூ. 743 கோடி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா ரூ.717 கோடி, பாங்க் ஆஃப் இந்தியா ரூ.584 கோடி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா ரூ.573 கோடி, கார்ப்பரேஷன் வங்கி ரூ. 543 கோடி, பாங்க் ஆஃப் பரோடா ரூ. 496 கோடி, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ரூ. 361 கோடி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ரூ. 345 கோடி,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ. 333 கோடி, ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் ரூ. 267 கோடி, அலகாபாத் வங்கி ரூ.235 கோடி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ரூ. 223 கோடி, சின்டிகேட் வங்கி ரூ.206 கோடி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தூர் ரூ.201 கோடி, இந்தியன் வங்கி ரூ.192 கோடி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் ரூ. 178 கோடி, தேனா வங்கி ரூ. 147 கோடி, ஆந்திரா வங்கி ரூ. 133 கோடி, யூகோ வங்கி ரூ.73 கோடி, ஸ்டேட் பாங்க் ஆஃப் செளராஷ்டிரா ரூ. 64 கோடி, பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கி ரூ.55 கோடி, ஐ.டி.பி.ஐ வங்கி ரூ. 35 கோடி என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்