உலக அளவில் கார் தொழிற்சாலைகளில் முன்னணி நிறுவனங்களான அமெரிக்காவின் போர்டு நிறுவனமும், ஜப்பானைச் சேர்ந்த டொயாட்டாவும் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்த உள்ளன.
மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து ஓடும் கார்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என போர்டு தெரிவித்துள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ. தூரம் ஓடும்.
இதன் செயல் தலைவர் பில் ஃபோர்டு ஜூனியர், அடுத்த ஆண்டு, எரிவாயு (கேஸ்), மின்சாரத்தில் இயங்கும் இரட்டை எரிபொருள் கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். மின்சாரத்தில் ஓடக்கூடிய வேன்கள் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவும், பேட்டரியில் ஓடக்கூடிய கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் கார்கள் 2012 ஆம் ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதில் இருவர் பயணம் செய்யலாம். இவை முதல் கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.