தொழில் துறை உற்பத்தி அதிகரிப்பு

திங்கள், 12 ஜனவரி 2009 (15:48 IST)
தொழில்துறை உற்பத்தி 2.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தொழில்துறை உற்பத்தி 2.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ( 2007 நவம்ர்4.9% )

கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவு 2008 அக்டோபரில் தொழில் துறை உற்பத்தி குறைந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதத்திலேயே அதிகரித்துள்ளது.

இந்த நிதி ஆண்டின் முதல் 8 மாதங்களில் தொழில் துறை உற்பத்தி 3.9 விழுக்காடாக உள்ளது. ( 2007-08 நிதி ஆண்டில் 9.2% )

தொழில் துறை உற்பத்தி பற்றிய கணகெடுப்பு அட்டவணையில் உற்பத்தி பொருட்களுக்கு 80% மதிப்பீடு கொடுக்கப்படுகிறது. இதன் வளர்ச்சி 2.4% ஆக உள்ளது. இந்த அட்டவணையில் மின் உற்பத்தி 3.1%, தாது பொருட்களின் உற்பத்தி 0.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் இயந்திரங்கள்-தளவாடங்கள், நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளது.

மத்திய அரசு பொருளாதார நெருக்கடியை தீர்க்க சென்ற மாதம் பல சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் பலன்கள் அடுத்த மாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே டிசம்பர் மாத தொழில்துறை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்