சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கடனுக்கான வட்டியை அரை விழுக்காடு குறைத்துள்ளது. இந்த வங்கி ஏற்கனவே கடனுக்கு 13.25 விழுக்காடு வட்டி வசூலித்து வந்தது. இது தற்போது பனிரெண்டரை விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் புதிய வட்டி விகிதம் அமல்படுத்தப்படும் என்று வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.