வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா சரிந்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.54 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை நிலவரத்தை விட 26 பைசா அதிகம்.
வெள்ளி இறுதி விலை 1 டாலர் ரூ.48.28-48.29 பைசா.
பங்குச் சந்தை சரிந்து வருவதால், அந்நியச் செலவாணி சந்தையிலும் ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.48.39 முதல் ரூ.48.65 என்ற அளவில் இருந்தது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்: 1 டாலர் மதிப்பு ரூ.48.60 பைசா 1 யூரோ மதிப்பு ரூ.65.10 100 யென் மதிப்பு ரூ.53.89 1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.73.22.