கோவை: குறுந்தொழில் முனைவோர் இன்று நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை, வட்டியில்லாமல் கடன் வழங்க வேண்டும் என கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த குறுந்தொழில் முனைவோர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால், பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.