தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பதற்கான பணிகள் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகிறது என ஆட்சியர் பெ.அமுதா தெரிவித்தார்.
சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக தருமபுரி, நல்லம்பள்ளி வட்டங்களில் 2,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் தற்போது ஒவ்வொரு நிலமும் தனித்தனியே சர்வே செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையிலேயே பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க இயலும் என்று நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.