தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பங்குகள் இன்று 4 விழுக்காடு சரிவைச் சந்தித்தது.
இன்று காலை வர்த்தகம் துவங்கியபோது ரூ.180ஆக இருந்த சத்யம் பங்குகள், பங்குச் சந்தை முடிவில் 4.19 விழுக்காடு சரிந்து ரூ.170.10ஆக குறைந்தது.
டெல்லியில் உள்ள ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் பெங்களூருவில் உள்ள மைண்ட் ட்ரீ நிறுவனங்களுடன் இணைவது குறித்து சத்யம் நிறுவனம் பேச்சு நடத்தி வருவதனாலேயே இந்தச் சரிவு ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.