துபாய்: மேற்கு வங்க மாநிலத்தில் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடையை நீடிப்பது என ஐக்கிய அரபு குடியரசு (UAE) முடிவெடுத்துள்ளது.
இந்தியாவின் அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கோழி பண்ணை உட்பட கால்நடை பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கியது. தற்போது இதன் தாக்குதல் மேற்கு வங்க மாநிலத்திற்கும் பரவியுள்ளது. இந்த மாநிலத்தில் சில்குரி நகருக்கு அருகே உள்ள பண்ணைகளில் தாக்குதல் மேற்கு வங்க மாநிலத்திற்கும் பரவியுள்ளது. இந்த மாநிலத்தில் சில்குரி நகருக்கு அருகே உள்ள பண்ணைகளில் ஹெச்5என்1 (H5N1) என்று கூறப்படும் பறவை காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது.
இதனால் மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள், பண்ணைகளில் உள்ள 60 ஆயிரத்திற்கும் அதிகமான கோழி உட்பட மற்ற பறவை இனங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளர்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து கோழி இறச்சி இறக்குமதி செய்வதற்கு ஐக்கிய அரசு குடியரசு தடை விதித்துள்ளது. இது குறித்து துபாய் நகராட்சி அதிகாரிகள் “கல்ப் நியுஸ்” என்ற பத்திரிக்கைக்கு கொடுத்ததுள்ள பேட்டியில், ஐக்கிய அரபு குடியரசில் உள்ள இறைச்சிகள், எவ்வித பாதிப்புமும் இல்லாமல் இருக்கின்றன. இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் இருந்து புதிதாக இறைச்சி இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் உணவு பொருட்களில் பறவை காய்ச்சல் உட்பட, மற்ற வியாதிகள் தாக்குதல் இருக்கின்றதா என்று கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.
ஐக்கிய அரபு குடியரசு, 2006 ஆம் ஆண்டு பறவை காய்ச்சல் நோய் தாக்கியதால், கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இப்போது இந்த தடையை மேலும் நீடித்துள்ளது.