பி.என்.பி ஹவுசிங் வட்டி குறைப்பு

சனி, 3 ஜனவரி 2009 (16:12 IST)
புது டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை நிறுவனமான பி.என்.பி ஹவுசிங் பைனான்ஸ் வீட்டு வசதி கடனுக்கான வட்டியை 1.75 விழுக்காடு வரை குறைத்து இருப்பதாக நேற்று அறிவித்தது.

இந்த நிறுவனத்தில் வீடு கட்ட, அடுக்கு மாடி குடியிருப்பு வாங்க ரூ.20 லட்சத்திற்குள் வாங்கிய கடனுக்கான வட்டியை 1.50 முதல் 1.75 விழுக்காடு வரை குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்படும்.

இதன்படி 15 வருடத்திற்குள் கட்டி முடிக்கப்படும் மாறும் வட்டி விகித கடனுக்கு 10.25 விழுக்காடு வசூலிக்கப்படும். இதே போல் 16 முதல் 20 வருடங்கள் தவணையில் உள்ள கடனுக்கு 10.5 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும். இந்த புதிய வட்டி விகிதம் ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கும் பொருந்தும்.

இதே போல் வைப்பு நிதிக்கான வட்டியையும் 7 விழுக்காடாக குறைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்