மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா குறைந்து.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.20 ஆக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 25 பைசா அதிகம்.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.46.95-46.96 பைசா.
பல்வேறு நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததாலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.46,97 முதல் ரூ.47.30 என்ற அளவில் இருந்தது.
நேற்று கடந்த பதினோறு மாதங்களில் இல்லாத அளவிற்கு டாலரின் மதிப்பு 71 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்: 1 டாலர் மதிப்பு ரூ.47.68 பைசா 1 யூரோ மதிப்பு ரூ.66.98 100 யென் மதிப்பு ரூ.52.78 1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.71.17.