நெருக்கடியால் ஹரியானாவிற்கு ரூ.3 ஆயிரம் இழப்பு

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:54 IST)
குருஷேத்ரா: பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ரூ.3,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று ஹரியானா நிதி அமைச்சர் பிரேந்தர் சிங் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பால், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட அனுமதிக்கப்பட மாட்டாது. மாநில அரசு பொருளாதார வளர்ச்சி 11 முதல் 11.5 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போதைய நெருக்கடியால் வளர்ச்சி 8 முதல் 8.5 விழுக்காடு அளவு இருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மாநில அரசு எடுக்கும்.

மாநில அரசின் வருவாய் குறைந்தாலும், மற்ற மாநிலங்களை விட, ஹரியான மாநில அரசு நிதி மேலாண்மை, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்