இந்தியன் வங்கி வட்டி குறைப்பு

புதன், 17 டிசம்பர் 2008 (11:47 IST)
மும்பை: பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை 1.5 விழுக்காடு குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் டிசம்பர் 15 ஆம் தேதியில் இருந்து கணக்கிடப்படும்.

இதே போல் மற்றொரு பொதுத்துறை வங்கியான யூகோ வங்கியும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வைப்பு நிதிக்கான வட்டியை 1 விழுக்காடு குறைக்கும் என்ற தெரிகிறது.

இது குறித்து யூகோ வங்கியின் மேலாண்மை இயக்குநர் எஸ்.கே.கோயல் கல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், எங்கள் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் வருகின்ற 26 ஆம் தேதி நடக்கிறது. இதில் வட்டி குறைப்பு பற்றிய முடிவு எடுக்கப்படும். வைப்பு நிதி, கடனுக்கான புதிய வட்டி விகிதம் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். வைப்பு நிதிக்கான வட்டியை குறைக்காமல், கடனுக்கான வட்டியை குறைப்பது சாத்தியமில்லை.
வீட்டு வசதி கடனுக்கான வட்டி குறைப்பு பற்றிய விபரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று கூறினார்.



வெப்துனியாவைப் படிக்கவும்