சென்னை: டிவிஎஸ் குழுமம், ஜப்பானைச் சேர்ந்த, பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்துடன் அதிர்வுகளை குறைக்கும் பாகங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, வாகனங்களின் அதிர்வுகளைக் குறைக்கும் பாகங்களைத் தயாரிக்கும்.
டி.வி.எஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஏற்கெனவே வாகனங்களுக்கு தேவையான ரப்பர் பாகங்கள் மற்றும் அதிர்வுகளைக் குறைக்கும் பாகங்களை தயாரிக்கிறது.
ஜப்பானைச் சேர்ந்த பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் டயர், டியூப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் வாகனங்களுக்கு தேவையான அதிர்வுகளைக் குறைக்கும் உதிரி பாகங்களையும் தயாரிக்கிறது.
இதன் தயாரிப்புகள் 150 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப உதிரி பாகங்கள் தயாரிப்புக்காக தொழில்நுட்ப கூட்டு சேர்வதை பிரிட்ஜ்ஸ்டோன் வழக்கமாகக் கொண்டுள்ளது. பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் ஜப்பான் தவிர, அமெரிக்கா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளது.
தற்போது இந்தியாவில் டிவிஎஸ் குழுமத்துடன் இணைந்து அதிர்வுகளை தயாரிக்கும் பாகங்களை தயாரிக்க உள்ளது.