புது டெல்லி: சிறப்பு பொருளாதார மண்டலம், தொழில் பூங்கா ஆகியவைகளுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கி உள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் 12 விழுக்காடாக குறைந்துள்ள தகவல் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு சிறப்பு பொருளாதார மண்யலங்கள், தொழில் பூங்காக்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது.
முன்பு இவற்றிற்கு ரியல் எஸ்டேட் அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது.
இப்போது உள்கட்டமைப்பு என மாற்றப்பட்டு உள்ளதால், குறைந்த வட்டியில் நீண்ட கால தவணையில் கடன் கிடைக்கும்.
இன்று ஒரு நிகழ்ச்சியில் ஏற்றுமதி மண்டலம், சிறப்பு பொருளாதார மண்டல ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் தலைமை இயக்குநர் எல்.பி.சிங்கால் பேசும் போது, அரசின் உயர் அதிகாரி பேசுகையில், மத்திய அரசு, ரிசர்வ் வங்கியிடம் சிறப்பு பொருளாதார மண்டலம், தொழில் பூங்காக்களை ரியல் எஸ்டேட் அந்தஸ்தில் இருந்து உள்கட்டமைப்பு அந்தஸ்திற்கு மாற்றுமாறு கூறியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியாவின் வர்த்தக, தொழில் சங்கங்களின் கூட்டமைப்புகளான பிக்கி, அசோசெம் ஆகியவை நேற்று, ஏற்றுமதி தொழில் துறைக்கு உடனடியாக உதவி வழங்காவிட்டால் அதிக இழப்பு ஏற்படும். குறிப்பாக ஜவுளி தொடர்பான தொழில்கள், தோல் பொருட்கள், கைவினை பொருட்கள், வைரம், நகை போன்ற அதிக அளவு வேலை வாய்ப்பு வழங்கும் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறியிருந்தன.
மத்திய வர்த்தக துறை செயலாளர் கோபால் பிள்ளை சமீபத்தில், பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், அடுத்த மார்ச் மாதத்திற்குள் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்து இருந்தார்.
சிறப்பு பொருளாதார மண்டல கவனித்துக் கொள்ளும் வர்த்தக அமைச்சகம், சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழில் நிறுவனங்களை உள்கட்டமைப்பு துணை பிரிவாக அறிவிக்க வேண்டும். இதனால் இவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறியிருந்தது.
இந்த பிரிவுக்கு, ரியல் எஸ்டேட் பிரிவை விட, 2 விழுக்காடு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.