நெல்லுக்கு போனஸ்-எம்.பி கோரிக்கை

சனி, 29 நவம்பர் 2008 (18:59 IST)
பஞ்சாப் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராணா குரிஜித் சிங், நெல்லுக்கு குவின்டாலுக்கு போனசாக ரூ.50 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ.850 என அறிவித்தது.

பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து வந்த கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு போனஸாக குவின்டாலுக்கு ரூ.50 வழங்குவதாக அறிவித்தது.

இந்நிலையில், பிகார்,மகாராஷ்டிரா.மத்திய பிரேதடம் ஆகிய மாநிலங்கள் கூடுதல் போனஸாக ரூ.50 வழங்குவதாக அறிவித்துள்ளன. இதனையும் சேர்த்து, அந்த மாநிலங்களில் விவசாயிகளுக்கு குவின்டாலுக்கு ரூ.950 கிடைக்கிறது.

முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், எப்போதும் தன்னை விவசாயிகளின் பாதுகாவலனாக காட்டிக் கொள்வார். ஆனால் நெல்லுக்கு கூடுதலாக போனஸ் அறிவிக்காமல், விவசாயிகளின் நலனை பாதுகாக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நாட்டின் உணவு தேவைக்காக இரவு-பகல் என்று பாராமல் உழைக்கும் பஞ்சாப் மாநில விவசாயிகளை, பாதல் அரசாங்கம் பாதுகாக்க தவறி விட்டது.

பாதல் அரசு கூடுதல் போனஸ் அறிவிக்காத காரணத்தினால், விவசாய சங்கங்கள் ரயில் மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று ராணா குரிஜித் சிங் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்