நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டத்தின் முக்கிய ஏரியான சுமார் 600 ஏக்கர் பரப்பு கொண்ட தூசூர் ஏரி நிரம்பி வழிகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்தது. சென்ற செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களும் இடைவிடாது 24 மணிநேரமும் மழை பெய்தது.
கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வெள்ளம்போல வருவதால் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை காரணமாக அனைத்து ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.