மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா அதிகரித்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 49.84 பைசாவாக இருந்தது.
பிறகு டாலரின் மதிப்பு 15 பைசா குறைந்தது. 1 டாலர் ரூ.49.80 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய இறுதி விலையை விட 15 பைசா குறைவு.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.95.
அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடைபெறுகையில் 1 டாலர் ரூ.49.80 முதல் ரூ.50 என்ற அளவில் விற்பனை ஆகி கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்: 1 டாலர் மதிப்பு ரூ.49.85 பைசா 1 யூரோ மதிப்பு ரூ.64.68 100 யென் மதிப்பு ரூ.52.49 1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.76.60.