பணவீக்கம் 8.90% ஆக குறைவு!.

வியாழன், 20 நவம்பர் 2008 (15:05 IST)
புதுடெல்லி: மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் நவம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.90 விழுக்காடாக குறைந்துள்ளது

அதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 8.98% ஆக இருந்தது.

அதே நேரத்தில் சென்ற வருடம் இதே கால கட்டத்தில் பணவீக்கம் 3.20% ஆக இருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்த வாரம் பணவீக்கம் குறைந்திருப்பதற்கு முக்கிய காரணம், தொழில் நிறுவனங்ள் பயன்படுத்தும் இலகுரக டீசல் விலை 11% குறைந்துள்ளது எரி எண்ணை விலை 9%, விமான பெட்ரோல் விலை 5% குறைந்துள்ளது.

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜீலை மாதம் 1 பீப்பாய் 137 டாலராக விற்பனையான கச்சா எண்ணெய் விலை, தற்போது 53 டாலராக குறைந்துள்ளது. இதனால் அரசின் விலை கட்டுப்பாட்டில் இல்லாத விமான பெட்ரோல், இலகு ரக டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்