இந்திய- பெலாரஸ் நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகத்தை உயர்த்த இலக்கு!

புதன், 19 நவம்பர் 2008 (14:53 IST)
புது தில்லி: இந்திய பெலாரஸ் நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு வர்த்தகத்தை, 2010 ஆம் ஆண்டில் 500 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்து, அதற்கும் மேல் அதிகரிக்க இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சரகமல்நாத் கூறினார்.

பெலாரஸ் நாட்டு அதிபர் லுகா சென்கா, சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு வந்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையை வர்த்தகத்தை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இரநாடுகளின் கூட்டு கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் கமல்நாத், பெலாரஸ் நாட்டின் தொழில் துறை அமைச்சர் ஏ ரசோஸ்கிவுடன் பேசினார்.

அப்போது கமல்நாத், இந்திய பெலாரஸ் நாடுகளிடையே இருதரப்பு வர்த்தகத்தின் வளர்ச்சி அதிகரித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவைவிட குறைவாக தான் உள்ளது. இயந்திர கருவிகள், ரேடியோ எலக்ட்ரானிக்ஸ், மருந்து பொருட்கள், விவசாய கருவிகள், சாலை அமைப்பதற்கான இயந்திர கருவிகள், உரங்கள், டயர்கள் போன்றவற்றில் இருதரப்பு வர்த்தகம் உயர வாய்ப்புள்ளது என்று கூறினார்.

2007-08 ஆம் ஆண்டுகளில் இந்தியா, பெலாரஸ் நாடுகளுக்கிடையே வர்த்தகம் 146.39 மில்லியன் டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 36 விழுக்காடு அதிகம். 2007-08 ஆம் ஆண்டில் பெலாரஸ் நாட்டிற்கு இந்தியா 21.18 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. பெலாரஸில் இருந்து 125.21 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது.

பெலாரஸ், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்த நாடு. சோவியத் ஒன்றியத்தில் இருந்த நாடுகள் பிரந்த போது. பெலாரஸூம், அதில் இருந்து பிரிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்