அபூர்வ கொய்யா!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (09:40 IST)
குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில் வீட்டில் அமைத்துருந்த தோட்டத்தில் சுமார் 500 கிராம் எடை கொண்ட கொய்யா காய்த்துள்ளது.

திருவட்டார் காங்கரை பகுதியில் வசிக்கும் சிந்துகுமார் என்பவரது வீட்டில் உள்ள கொய்யா மரத்தில், இந்த கொய்யா காய்த்துள்ளது. இவர் வீட்டுத் தோட்டத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒட்டு இன கொய்யாச் செடியை நட்டார்.

தற்போது இந்த மரம் காய்க்கத் தொடங்கியுள்ளது. இதில், ஒரு கிளையில் காய்த்த 2 காய்களில் ஒன்று அரை கிலோவுக்கும் அதிக எடையுடன் சுமார் 16 செ.மீ. நீளத்தில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்