திண்டுக்கல்: மத்திய அரசு தொழில் கொள்கையில் மாற்றம் செய்து, புதிய மாற்றங்களுடன் தங்க கட்டுப்பாடு சட்டத்தை, நகைத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் திண்டுக்கல் தங்கம், பொன், வெள்ளித் தொழிலாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சங்கத்தின் 64 வது ஆண்டு கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதற்கு தலைவர் ஆர்.மருதை ஆசாரி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் அரசு அமைத்துள்ள பொற்கொல்லர் நல வாரியத்துக்கு நகை தொழிலாளரையே தலைவராக நியமிக்கவேண்டும். வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு அனுபவம் வாய்ந்த நகைத் தொழிலாளரையே நியமிக்க வேண்டும்.
அத்துடன், அவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். தொழில் கொள்கையில் மாற்றம் செய்து, தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் மத்திய அரசு புதிய மாற்றங்களுடன் அமல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.