அரசு நிர்ணயித்த உர விலை!

சனி, 15 நவம்பர் 2008 (11:05 IST)
சிவகங்கை: lதமிழக அரசு நிர்ணயித்துள்ள உரங்களின் விலை பட்டியல் வேளாண்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய உள்ள இரசாயன உரங்களுக்கு (50 கிலோ) அரசு நிர்ணயித்துள்ள அதிக பட்ச சில்லறை விலை விபரம்.

யூரியா- ரூ.251.16, டிஏபி- ரூ.486.20, எம்ஏபி-ரூ.486.20, பொட்டாஷ்- ரூ.231.66, சூப்பர் பாஸ்பேட் -ரூ.176.80.

கலப்பு உரங்கள் (காம்ளக்ஸ் உரங்கள்) 16;20;0;13 விலை ரூ.305.50,-20;20;0;13 விலை ரூ.327.34-20;20;0;0 விலை ரூ.277.84- 23;23;0;0 விலை ரூ.319.54, 28;28;0;0; விலை ரூ.389.01, 10;26;26;0 விலை ரூ.374.24, 12;32;16;0 விலை ரூ.397.12, 14;28;14;0 விலை ரூ.366.60, 14;35;14;0 விலை ரூ.425.62, 15;15;15;0 விலை ரூ.266.29, 17;17;17;0 விலை ரூ.301.81, 19;19;19;0 விலை ரூ.337.32



அரசு நிர்ணயித்துள்ள விலையை விட, அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்தால், விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம் என்று சிவகங்கை வேளாண்துறை இணை இயக்குர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் தொலைபேசி எண்கள்: வேளாண்மை இணை இயக்குநர், சிவகங்கை- செல்- 9443338484, வேளாண்மை அலுவலர் (தரக் கட்டுப்பாடு)- செல்-9486781531.

வெப்துனியாவைப் படிக்கவும்