கடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவு நவம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 8.98 விழுக்காடாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதத்தில் பணவீக்கம் 8.90% ஆக இருந்தது. அதற்கு பின் அதிகரித்து அதிகபட்சமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் 12.91% ஆக அதிகரித்தது.
இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 10.72% ஆக இருந்தது.
பணவீக்கம் கணக்கிடப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பார்லி விலை 4 %, சோளம், துவரம் பருப்பு, முட்டை, இறைச்சி விலை தலா 2% அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் கம்பு, தேயிலை விலை தலா 2%, உளுந்து, கொத்தமல்லி, மற்ற மசாலா பொருட்களின் விலை 1% குறைந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை 8%, தவிட்டு எண்ணெய் விலை 6%, பருத்தி எண்ணெய், நல்லெண்ணெய், பிண்ணாக்கு விலை தலா 3%, சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் விலை 1% குறைந்துள்ளது.
வெல்லம் விலை 6%¸ கால்நடை தீவனம் விலை 1% அதிகரித்துள்ளது.
இயற்கை ரப்பர், ஆமணக்கு விதை விலை தலா 2%, நிலக்கடலை, எள் விலை 1% குறைந்துள்ளது.
உரம், மின் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தும் நாப்தா விலை 33%, விமான பெட்ரோல் விலை 18%, எரி எண்ணெய் 13%, இலகு ரக டீசல் விலை 6% குறைந்துள்ளது. அதே நேரத்தில் தார் விலை 2% அதிகரித்துள்ளது.
தேனிரும்பு விலை 12%, இரும்பு சட்டம், ஆங்கிள் போன்றவை 6%, இரும்பு கம்பி 4%, தகடு 3%, மற்ற உருக்கு மற்றும் இரும்பு பொருட்களின் விலை 1% குறைந்துள்ளது.