பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கடன் பத்திரம்: மத்திய அரசு!
செவ்வாய், 11 நவம்பர் 2008 (11:41 IST)
பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் கடன் பத்திரங்களை மத்திய அரசு வழங்குகிறது.
இந்த நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்கொள்ளக் கூடிய இழப்பீட்டைக் கணக்கிட்டு, அதற்கேற்ப இந்த கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை அடக்க விலையை விட குறைந்த விலைக்கு விற்பதால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய மத்திய அரசு அவ்வப்போது, கடன் பத்திரங்களை வழங்கி வருகிறது. இவற்றை ஆயில் பாண்ட் (Oil bond) என்று அழைக்கிறோம்.
இந்தப் பத்திரங்களை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.