புதுகை வணிக நிறுவனங்களுக்கு வரி உயர்வு: கடையடைப்பு போராட்டம்!

திங்கள், 10 நவம்பர் 2008 (14:35 IST)
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் வணிக நிறுவங்கள், வீடுகளுக்கு நதராட்சி வரியை அதிக அளவு அதிகரித்துள்ள நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வருகின்ற 18 ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் கழகம் முடிவு செய்துள்ளது.

கடை அடைப்பு போராட்டம் பற்றிய தீர்மானம், வர்த்தகர் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் கூட்டம் தலைவர் காசி. விஸ்வநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை நகராட்சி உயர்த்தியுள்ள வரி உயர்வு விகிதத்தை வீடுகளுக்கு 10 விழுக்காடாவும், வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகளுக்கு 40 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது.

இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.எனவே சென்னையில் நகராட்சி நிர்வாக ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது.

அத்துடன் வரி உயர்வைக் கண்டித்து வருகின்ற 18 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவது.

இதில் பலனில்லை என்றால், உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் வர்த்தகர் கழக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


வெப்துனியாவைப் படிக்கவும்