கோ-ஆ‌‌ப்டெ‌க்‌ஸ் ‌தீபாவ‌ளி ‌வி‌ற்பனை 24 ‌விழு‌க்காடு அ‌திக‌ரி‌ப்பு!

புதன், 5 நவம்பர் 2008 (17:10 IST)
கோ-ஆப்டெக்ஸில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் 24 ‌விழு‌க்காடு அதிகரித்திருக்கிறது.

கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை 18.9.2008 அன்று தொடங்கி 1.11.2008 வரை நடைபெற்றது. தீபாவளியை முன்னிட்டு விற்பனைக் குறியீடாக ரூ.60 கோடி நிர்ணயம் செ‌‌ய்யப்பட்டது.

பேர‌றிஞ‌ர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு 30 ‌விழு‌க்காடு தள்ளுபடியும், ஆயத்த ஆடைகள் மற்றும் விசைத்தறி ரகங்களுக்கு 20 ‌விழு‌க்காடதள்ளுபடியும் வழங்க‌ப்ப‌ட்டது.

இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் 14 கண்காட்சிகளும், 65 விரிவாக்க விற்பனை நிலையங்களும் நடத்தப்பட்ன. கட‌ந்ஆ‌ண்டி‌ல் தீபாவளி சிறப்பு விற்பனை ரூ.50.40 கோடியாகும்.

இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை ரூ.62 கோடியாகும். இது கடந்த ஆண்டின் தீபாவளி விற்பனையை விட சுமார் 24 ‌விழு‌க்காடு அதிகம் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்