சிண்டிகேட் வங்கி வட்டி குறைப்பு!

புதன், 5 நவம்பர் 2008 (15:32 IST)
பெங்களூரு: பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கி முக்கால் விழுக்காடு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் எடுத்த நடவடிக்கைகளால், பொதுத்துறை வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி ஆகியவை கடனுக்கான வட்டி அரை விழுக்காடு குறைத்துள்ளன. ஸ்டேட் பாங்க் ஆப் பைகானுர் அண்ட் ஜெய்ப்பூரும் வட்டியை குறைத்துள்ளது.

இன்டஸ்டிரியல் டெவலப்மென்ட் பாங்க் ஆப் இந்தியா (ஐ.டி.பி.ஐ) வீட்டு கடனுக்கான வட்டியை அரை விழுக்காடு குறைத்துள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிண்டிகேட் வங்கி நேற்று, கடனுக்கான வட்டியை முக்கால் விழுக்காடு குறைப்பதாக அறிவித்தது. இந்த வட்டி குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.

இந்த வங்கி முன்பு 14 விழுக்காடு வட்டி வசூலித்து வந்தது. இனி இதன் வட்டி 13.25 விழுக்காடாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்